Monday, October 1, 2012

மருத்துவத்துக்கு பணம் வசதிசெய்வோம்! 0091-94459 22333 - சாய்லட்சுமி

Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

மருத்துவத்துக்கு பணம் வசதிசெய்வோம்!


"ஏகம் பவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வரும் சாய்லட்சுமி: சொந்த ஊர் ஐதராபாத்ல, காந்தி மெடிக்கல் காலேஜ்ல படிச்சேன். இறுதியாண்டு படிச்சப்போ, "இன்டர்ன்ஷிப்'க்காக, சென்னையில இருக்கிற, காஞ்சி காமகோடி மருத்துவமனைக்கு வந்தேன். அப்போ நான் சந்திச்ச சம்பவம் தான், இப்போ நான் செஞ்சுட்டு இருக்கற முயற்சிகளுக்கான முதல் புள்ளியை வைத்தது.பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தை அது... "தொடர்ந்து வென்டிலேட்டர்ல தான் வைக்கணும்'னு டாக்டர் சொல்ல, "எங்களுக்கு அந்தளவுக்கு பண வசதி இல்ல சார்...'ன்னு, பெற்றோர், அழுதுகிட்டே, குழந்தையை வாங்கிட்டுப் போயிட்டாங்க. ரொம்ப நாளைக்கு அந்த சம்பவம், மனசை பாரமாக்கிட்டே இருந்துச்சு.படிப்பை முடிச்ச பிறகு, சென்னை, மேத்தா மருத்துவமனையில டாக்டரா பணியை ஆரம்பிச்சேன். மருத் துவ வசதி தேவைப்பட்ட ஒரு குழந்தைக்காக, நண்பர்கள் கிட்ட உதவி கேட்டேன். சேர்ந்த பணத்தை, குழந்தையோட பெற்றோர்கிட்ட கொடுத்தேன். அவங்க சொன்ன நன்றிக்கும், சிகிச்சை முடிஞ்சு. அந்தக் குழந்தை சிரிச்ச சிரிப்புக்கும் இணை, இந்த உலகத்தில் எதுவும் இல்லைனு தோணுச்சு.தொடர்ந்து, பல குழந்தைகளுக்கு, இப்படி உதவிகள் பெற்றுத் தந்தேன். ஒரு கட்டத்துல, இந்த உதவியை முழுநேர சேவையாக்க நினைச்ச நான், மருத்துவமனை வேலையிலிருந்து விலகினேன். சில உதவும் உள்ளங்களை இணைச்சிக்கிட்டு, 2007ல, "ஏகம் பவுண்டேஷன்' துவங்கினேன்.ஒவ்வொரு மருத்துவமனையுடனும் தொடர்பு கொண்டு, அவங்க மருத்துவமனையில் பண வசதி இல்லாததால சிகிச்சை தடைபட்டுப் போற குழந்தைங்க இருந்தா, தெரிவிக்கச் சொல்லிக் கேட்போம். நானும், நண்பர்களும், சமுதாயத்து எல்லா தரப்புலயும் உதவி கோருவோம்.சில மருத்துவமனைகள், எங்க வேண்டுகோளுக்கு இணங்க, ஏழ்மை நிலைக் குழந்தைகளோட மருத்துவச் செலவுக் கட்டணத்தை குறைச்சும் உதவறாங்க. சென்னையில் மட்டும், 50 மருத்துவமனைகள், எங்களோட இணைஞ்சுருக்காங்க. எங்களோட ஹெல்ப் லைன்
நம்பர், 0091-94459 22333. பண வசதியில்லாததால, மருத்துவம் செய்துக்க முடியாத குழந்தைகள் இருந்தா, எங்களுக்கு தெரியப்படுத்துங்க!



Sunday, August 26, 2012

கண் தான விழிப்புணர்வு - 99443-13131 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., செய்தால் போதும்.தொடர்புக்கு: 098341-43650.

மனிதனுக்கு "தானம்' அழகு!கண் தான விழிப்புணர்வு பற்றி பிரசாரம் செய்யும் ஜெயராமன்: ரோட்டரி கிளப் உதவியுடன், கண்தான விழிப்புணர்வு குறித்த, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். நாமும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில், கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, செயலில் இறங்கினேன். கண் தான அவசியம் குறித்து, அனைவரும் அறிந்திருப்பர் என, நினைத்திருந்த எனக்கு, அதிர்ச்சியாக இருந்தது. இந்தியாவில், 500 கண் வங்கிகள் உள் ளன. 15 லட்சம் பேர், "கார்னியா' எனும் விழி வெண்படலத்தில் ஏற்பட்ட பாதிப்பால், பார்வைத்திறன் இல்லாமல் உள்ளனர். மாற்றுக் கண் பொருத்துவதன் மூலம், இவர்களுக்கு பார்வை தர முடியும்.ஆண்டிற்கு, ஒரு லட்சம் கண்கள் தேவை. கடந்த ஆண்டு மட்டும், 75 லட்சம் பேர், கண் தானம் செய்திருக்க முடியும். இதன் மூலம், 150 லட்சம் கண்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 500 வங்கிகளிலும் சேர்த்து, 40 ஆயிரம் கண்கள் மட்டுமே பெற முடிந்தது.அதிலும், மற்றவர்களுக்கு பொருத்தக் கூடிய நிலையில் இருந்தது, வெறும், 15 ஆயிரம் கண்கள் தான். கண் வங்கியை தொடர்பு கொண்டு, எத்தனை பேர் உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர் எனக் கேட்ட போது, அதிகபட்சம், 4,000 பேர் என்ற தகவல், அதிர்ச்சியாக இருந்தது.கண் தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்னும் எளிமையாக, புதுமையாகச் செய்தால், நிறையப் பேர் கண் தானம் செய்யவும், கண்களை தானமாக பெற்றுத் தரவும் முன் வருவர் எனத் தோன்றியது. அதன் விளைவு தான், எஸ்.எம்.எஸ்., சேவை.கண் தானம் செய்ய விரும்புபவர், 108ஐ தொடர்பு கொண்டால், அவர்கள், அருகிலுள்ள தனியார் அல்லது அரசு கண் வங்கிக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தருவர். மருத்துவக் குழுவினர் வந்து, கண்களை பெற்றுக் கொள்வர். தவிர, கண் தானம் செய்ய விரும்புவோர், தங்கள் பெயர், ஊர் விவரங்களைச் சேர்த்து, 99443-13131 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., செய்தால் போதும்.தொடர்புக்கு: 098341-43650.



Refer URL : http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93


Saturday, August 4, 2012

"வாசனை உணர முடிகிறதா?'

"வாசனை உணர முடிகிறதா?'



தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் ரவி ராமலிங்கம்: நம் மூக்கிலிருந்து மூளைக்கு, ஒரு மெல்லிய நரம்பு போகும். அந்த நரம்பைச் சுற்றி பாதுகாப்பிற்காக, எலும்பாலான ஒரு, "லேயர்' இருக்கும். காது மடல்களில் உள்ள குறுத்தெலும்பு போன்று, இந்த எலும்பும் உறுதியற்றதாகத் தான் இருக்கும். தவறி விழுந்தாலோ, விபத்தினாலோ இந்த எலும்பு பாதிக்கப்பட்டிருந்தால், நரம்பு நசுங்கும் பாதிப்பைப் பொறுத்து, வாசனைகளை உணர்வது குறையும் அல்லது உணர முடியாமலேயே கூட போகும். இந்த பாதிப்பிற்கு, "ஹைபோஸ்மியா' என்று பெயர். சிறிய விபத்துகள், மூளைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது தவிர, சரியாக சிகிச்சை எடுக்காத, "சைனஸ்' பிரச்னை, மாசு அலர்ஜியால் மூக்கின் உள்பகுதியில் ஏற்படும், "பங்கஸ்' பாதிப்பு, இதனால் ஏற்படும் சதை வளர்ச்சி, மூக்கின் எலும்பு வளைந்திருப்பது, இவற்றாலும் வாசனை நுகர்வதில் குறைபாடு ஏற்படும். வாசனை தான் பசியைத் தூண்டும். எனவே, இந்த குறைபாட்டால், சாப்பாடு மீது விருப்பம் குறைந்து விடும்; சரியாகச் சாப்பிட முடியாது. உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டு, பல பிரச்னைகள் உருவாகும். "சைனஸ்' பாதிப்பால், வாசனை உணர்வதில் குறைபாடு ஏற்பட்டிருந்தால், மருந்து, மாத்திரை மூலம் குணப்படுத்த வாய்ப்புண்டு. "சைனஸ்' பாதிப்பு முற்றிவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். மற்றபடி, வாசனை உணரும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை அல்லது, "பங்கஸ்' சதை வளர்ச்சி என்றால், அறுவை சிகிச்சை மூலம் தான், தீர்வு காண முடியும். சளி பிடித்திருந்தால், அப்போது, வாசனை உணர முடியாமல் இருக்கும்; இது சகஜம். ஆனால், விபத்திற்குப் பிறகோ அல்லது சாதாரணமாகவோ வாசனை உணர்வதில் குறைபாடு இருப்பதாகத் தெரிந்தால், உடனே, காது, மூக்கு, தொண்டை மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்; இந்த விஷயத்தில் அலட்சியம் கூடாது


Refer Dinamalar Link.


http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93






Wednesday, August 1, 2012