இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்...
தர்பூசணிப்பழச் சாறு:
கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.
நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.
அத்திப்பழச்சாறு:
அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.
இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.
அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..
ஆப்பிள் பழச்சாறு:
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
திராட்சைச் சாறு:
திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.
ஆரஞ்சுச் சாறு:
தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.
இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.
எலுமிச்சைச் சாறு:
பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.
தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.
இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.
உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.
பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.
தக்காளிச் சாறு:
தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.
மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.
Sunday, May 22, 2011
Tuesday, March 22, 2011
எகிறிக் குதி - வெற்றிக்கு ஒரு புத்தகம்
பெரிய வெற்றிகளை அடைந்த பிரபலங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களும் நம்மைப்போல் திடீரென்று ஒரு திருப்புமுனை. ஒரே தாவலில் வெற்றியை தொட்டுவிடுகிறார்கள். இந்தத் தாவல் எப்படி நிகழ்கிறது? இந்தக் கேள்வியை முன்வைத்துப் பேசும் சமீபத்திய புத்தகம். "தி லீப்' (The Leap) இதன் ஆசிரியர் ரிக் ஸ்மித்.
இந்த ரிக் ஸ்மித்தும் நம்மைப்போலச் சாதாரணமான ஒரு வாழ்க்கையில் முடங்கிக் கிடந்தவர்தான். ஆஃபீஸ், சம்பளம், பிரமோஷன், போனஸ் என்று சின்னச் சின்ன சந்தோஷங்களில் திருப்தியடைந்து கொண்டிருந்தவர், திடீரென்று ஒரு புத்தகம் எழுதினார்; பிரபலமானார், வெற்றிகரமான எழுத்தாளராக நாடு முழுவதும் சுற்றி வந்தார்.
அந்த சமயத்தில் வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கைகளை ஊன்றிப் படித்து அவர்களின் மூன்று வெற்றி ரகசியங்களை கண்டுபிடித்திருக்கிறார்.
"தி லீப்' புத்தகத்தில் ரிக் ஸ்மித் அழகான உதாரணங்களோடு விவரிக்கும் அந்த மூன்று விஷயங்கள் இதோ:
1. உங்களுடைய "கலர்' என்ன என்று கண்டுபிடியுங்கள்
முதலில், இங்கே ரிக் ஸ்மித் "கலர்' என்று குறிப்பிடுவது நம்முடைய தோலின் நிறத்தை அல்ல. நாம் நிஜமாகவே நம் வாழ்க்கையைக் கொண்டு என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைத்தான்.
உதாரணமாக, ஒருவர் ஏதோ ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருக்கலாம். ஆனால், அவருக்குள் என்ளைக்காவது பெரிய நடிகராக வேண்டும் என்கிற தாகம் இருக்கும். அதுதான் அவருடைய "கலர்'.
2. அந்த கலரை வைத்து வண்ணம் தீட்டுவதற்கு ஏற்ற ஒரு யோசனையை திட்டத்தைத் தேடிப் பிடிப்பது. அந்த யோசனை பெரிய அளவில் இருக்கட்டும் என்கிறார்.
உதாரணமாக, நீங்கள் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று நினைத்தால், லோக்கல் டீம் ரேஞ்சுக்கு யோசிக்காதீர்கள்; இந்திய அணியில் இடம் பிடிக்கவேண்டும், வேர்ல்ட் கப் ஜெயிக்கவேண்டும் என்கிற அளவுக்கு ஆசைப்படுங்கள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.
அடுத்து, அந்த யோசனையில் சுயநலம் இருக்கக்கூடாது. அதாவது, நீங்கள் பெரிய கிரிக்கெட் வீரராக வந்தால் அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்கிற சுயநல நோக்கத்தோடு மட்டும் அதில் இறங்கினால், சுற்றியிருக்கிற மற்றவர்கள் யாரும் உங்களுக்கு மனம் வந்து உதவமாட்டார்கள்.
அதற்குப் பதிலாகப் பொதுநல நோக்கம் கொண்டு செயல்படுகிறவர்களுக்கு எல்லோருடைய ஆதரவும் கிடைக்கும். அவர்களுடைய முன்னேற்றமும் வேகமாக இருக்கும்.
அப்படியானால், என்னுடைய சொந்த லாபத்தைப் பற்றி நான் நினைக்கவே கூடாதா?
நினைக்கலாம். பொதுநலத்தோடு ஓரமாகக் கொஞ்சம் சுயநலமும் கலந்திருந்தால் தப்பில்லை. அதேசமயம் வெறும் சுயநலம்தான் உங்களுடைய இலக்கு என்றால் கஷ்டம். அதில் மற்றவர்களுக்கும் உதவுகிற ஒரு நோக்கமும் இருந்தால், அந்த நல்லெண்ணமே உங்களை தூக்கிவிடும்.
கடைசியாக, எளிமையான யோசனை. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெளிவாகப் புரியவேண்டும். இதுவா, அதுவா என்று புரியாமல் குழப்பியடித்தால் "பய ஒரு மாதிரி' என்று மற்றவர்கள் விலகிப் போய்விடுவார்கள். யாரும் உதவமாட்டார்கள்.
சரி. கலர் கிடைச்சாச்சு, யோசனையும் கிடைச்சாச்சு, அடுத்து என்ன? எகிறவேண்டியதுதானே?
அதுதான் கூடாது.
3. "நீங்கள் யோசித்து வைத்திருக்கும் விஷயம் என்னதான் உயர்வானதாக இருந்தாலும், அதை நம்பி ஓரளவுக்குமேல் ரிஸ்க் எடுக்காதீர்கள். கவனமாகக் காலடி எடுத்துவையுங்கள்' என்கிறார் ரிக் ஸ்மித்.
இதென்ன கூத்து? பொதுவாக ரிஸ்க் எடுத்தால்தானே நிறைய ஜெயிக்க முடியும் என்று சொல்வார்கள்?
உண்மைதான். ஆனால், அதேசமயம் கண்மூடித்தனமாக ரிஸ்க் எடுப்பதும் தவறு. இப்போது நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து அடுத்து செல்லவிருக்கும் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பாதையில் ஏதாவது சிரமங்கள், தடைகள் வந்தால் எப்படிச் சமாளிப்பது என்று மாற்று யோசனைகளைப் பக்காவாகத் தயார் செய்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் ஆழம் பார்த்துக் காலை விடுங்கள் களம் ஓரளவு பழகியபிறகு புகுந்து விளையாடலாம்.
சுருக்கமாகச் சொன்னால், உங்க கலரைத் தெரிஞ்சுக்கோங்க, அதுக்கு ஏற்றதுபோல் ஒரு பெரிய யோசனையைக் கண்டுபிடிங்க, கவனமா காலடி எடுத்து வெச்சு மேலே மேலே போங்க!
- என். சொக்கன்

Monday, March 14, 2011
தள்ளாதே! - வெற்றிக்கு ஒரு புத்தகம் !
தள்ளாதே! - வெற்றிக்கு ஒரு புத்தகம் !
இப்போது, உங்களுக்கு ஒரு சின்னப் பரீட்சை. இந்தக் கொஸ்டின் பேப்பரில் மொத்தம் பத்துக் கேள்விகள் இருக்கும். அதில் ஒன்பது கேள்விகள் சுலபமானவை, பத்தாவது கேள்வி கஷ்டமானது. நீங்கள் எதை முதலில் எழுதுவீர்கள் ?
நம்மில் பெரும்பாலானோர் சுலபமான கேள்விகளைத்தான் முதலாவதாக எழுதி முடிப்போம். அதன்பிறகு கடைசியாக அந்தக் கஷ்டமான கேள்விக்கு வருவோம்.
இது பரீட்சையில் சரிப்படும். நிஜ வாழ்க்கையில் ?
மேலே பார்த்த அதே பரீட்சை. ஆனால், பத்துக்கேள்விகளுக்குப் பதிலாக, இங்கே பத்து வேலைகள். அவற்றில் ஒன்றுமட்டும் கஷ்டமானது. நீங்கள் எதை முதலில் செய்வீர்கள் ?
நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது பேர் அந்தக் கஷ்டமான வேலையை "அப்புறமாகப் பார்த்துக்கலாம்' என்று தள்ளிப்போடுவார்கள். மற்ற சுலபமான வேலைகளை உடனே செய்து முடித்து திருப்தி அடைவார்கள்.
ஆனால், பரீட்சைக்கும் இதற்கும் முக்கியமான வித்தியாசம், அங்கே கஷ்டமான கேள்வியைத் தவறவிடுகிற ஒரு மாணவன், தேர்வு முடிவதற்குள் அதற்குத் திரும்பி வருவான். அந்தக் கேள்விக்குச் சரியாக பதில் எழுதி மார்க் வாங்கிவிடுவான்.
நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை. சிரமம் என்று நினைத்துத் தளளிப்போடுகிற ஒரு வேலையை, அத்தனை சுலபத்தில் நாம் மீண்டும் எடுத்துச் செய்வதே கிடையாது. காரணம், இன்னும் இன்னும் சுலபமான வேறு வேலைகள் குறுக்கிடும். மனம் அதில்தான் போகும். கஷ்டமான வேலையை எடுத்துச் செய்யத் தோன்றாது.
"தள்ளிப்போடுதல்' என்பது கொடுமையான ஒரு வியாதி. அதைச் சீக்கிரத்தில் குணப்படுத்திக்கொள்ளாவிட்டால், நம்முடைய நேரம் ஓடும், ஆனால் நாம் எங்கேயும் ஓடாமல், முன்னேறாமல் அதே இடத்தில்தான் நிற்போம். இந்த உண்மையை நகைச்சுவையோடு விளக்கிச் சொல்லுகிற ஒரு சுவாரஸ்யமான புத்தகம் "ஈட் தட் ஃப்ராக்' (Eat That Frog). எழுதியவர், ப்ரயன் ட்ரேஸி!
ஃப்ராக் ? தவளைக்கும் தள்ளிப்போடுவதற்கும் என்ன சம்பந்தம்?
"உங்கள்முன்னே தட்டில் அறுசுவை உணவு இருக்கிறது. அதற்கு மத்தியில் ஒரு தவளையும் இருக்கிறது. உவ்வே, அதைப்போய் யார் சாப்பிடுவார்கள்? ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு மற்ற ஐட்டங்களை ஒரு கட்டு கட்டுகிறீர்கள்!''
"கஷ்டமான வேலை' என்பதும் ஓர் அருவருப்பான தவளையைப்போல்தான் நமக்குத் தோன்றுகிறது. அதைத் தள்ளிப்போட்டுவிட்டால் நம் வாழ்க்கை ஆனந்தமயமாக இருப்பதுபோல் எண்ணுகிறோம்.
உண்மையில் அது ஒரு மாயை. நீங்கள் தள்ளிப்போடும் அந்த முக்கியமான வேலைதான் தனிப்பட்ட வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தைக் கொண்டுவருகிற விஷயமாக இருக்கும்.அதைத் தள்ளிப்போடுவதன்மூலம் உங்களுடைய வளர்ச்சிக்கு நீங்களே தடை போட்டுக்கொள்கிறீர்கள் என்பதுதான் நிஜம்.
ஆகவே, "அறுசுவை உணவு கிடக்கட்டும், முதலில் அந்தத் தவளையைச் சாப்பிடுங்கள்' என்று வலியுறுத்திகிறார் ப்ரயன் ட்ரேஸி. ஆரம்பத்தில் இது ஒரு கஷ்டமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் போகப்போக சிரமமான வேலைகளைச் செய்து முடிக்கிற சவால் உங்களுக்குப் பிடித்துவிடும். அவற்றை உடனுக்குடன் செய்வதால் கிடைக்கும் பெரிய பலன்கள் புரிய ஆரம்பிக்கும்!
இப்போது இன்றைக்கு நீங்கள் செய்ய நினைத்திருக்கும் வேலைகளை ஒரு பட்டியல் போடுங்கள். அதில் "தவளை' எது என்று யோசியுங்கள். அதை முதலில் செய்யுங்கள். அதனால் கிடைக்கும் மனத்திருப்தியை அனுபவியுங்கள்!
-என்.சொக்கன்

Tuesday, March 8, 2011
வலுவான எலும்பு.. வளமான வாழ்வு...
வலுவான எலும்பு.. வளமான வாழ்வு...
நாற்பது வயதைத் தாண்டி விட்டாலே பல்வேறு நோய்களோடு எலும்பு தேய்மானமும் பெண்களைத் தேடி வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் எலும்பு தேய்மானம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 40 ஆண்டுகளில் இந் நோய் 30 கோடி பேரைத் தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஐம்பது வயதைத் தாண்டிய பெண்களில், 2 பேரில் ஒருவர் எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது எலும்பு தேய்மானம் நோயால் இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந் நோயின் ஆரம்ப அறிகுறியாக மூட்டின் மேல் பகுதியில் லேசான வலி, குதிகாலில் வலி ஏற்படும். சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலி வரலாம். இந்த பாதிப்புகள் உள்ளவர்கள் உடனடியாக மூட்டுமாற்று சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.
எனினும், வரும் முன் காக்கும் நடவடிக்கையாக அன்றாட உணவில் கால்சியம், வைட்டமின் கே, டி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் எலும்பு நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
பால் தயாரிப்பு உணவுப் பொருள்களில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. ஒரு டம்ளர் பாலில் 300 கிராம் கால்சியம் அடங்கியுள்ளது. இனிப்பு அதிகம் சேர்க்காமல் பால் உணவுப் பொருள்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை தவிர, கடல் மீன்கள், பாசிகள், சோயாபீன்ஸ், மொலாசஸ், முளைவிட்ட கொண்டை கடலை ஆகியவற்றிலும் கால்சியம் சத்து உள்ளது.
அன்றாட உணவு வகைகள் மூலம் உடலுக்கு போதுமான கால்சியம் கிடைக்கவில்லை என்றால் நாள்தோறும் 1,000 முதல் 1,500 மில்லி கிராம் கால்சியமும், 300 மில்லி கிராம் மேக்னிசியமும் டாக்டரின் ஆலோசனைபேரில் மருந்தாக உட்கொள்ளலாம்.
எலும்புகள் வலுவடைவதற்கு வைட்டமின் கே, டி ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு உண்டு. கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கனிகளில் வைட்டமின் கே-வும், சிறிய மீன்கள், பால், முட்டை, காளான்களில் வைட்டமின் டி சத்தும் நிறைந்துள்ளன.
"பைதோஸ்' என்றழைக்கப்படும் தாவர வகையிலிருந்து கிடைக்கும் சத்துகளும் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உணவில் காய்கனிகள், கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
பொட்டாசியம், லூடின் சத்து போதுமான அளவு கிடைக்க பழ வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இனிப்பு வகைகள், அதிக உப்பு, குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது.
பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாஸýக்குப் பின்னரே எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க அந்தப் பருவத்தில் அவர்கள் கால்சியம் சத்து மிகுந்த பொருள்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அவர்கள் உடல் எடையைக் குறைக்கும் எளிய பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளலாம்.
இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை நடுத்தர வயது பெண்கள் இப்போதே கடைபிடித்து வந்தால் எதிர்காலத்தில் எலும்பு தேய்மானம் இன்றி இனிமையாக வாழலாம்.

Subscribe to:
Posts (Atom)