கர்ப்பிணிகளின் கவனத்திற்கு!
கர்ப்ப காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு பற்றி விளக்கும், மகளிர் நல மருத்துவர், ஸ்ரீதேவி: குழந்தைகளின் வளர்ச்சி என்பது கர்ப்ப காலத்திலிருந்தே ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து, வளர்ச்சி மற்றும் சுகாதாரத்தில், முன் கூட்டியே கவனத்தோடு செயல்படுவது அவசியம். இல்லையெனில், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்றாகி விடும். கர்ப்ப காலத்தில், இரும்புச் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டால், குழந்தைகள் கறுப்பாக பிறக்கும் என, சில கர்ப்பிணி பெண்களிடம், மூட நம்பிக்கை உள்ளது. கர்ப்பம் அடைந்தது முதல், மூன்று மாதங்களுக்கு, இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவது அவசியம். இது, ஒரு தாய், தன் குழந்தைக்கு செய்யும், மிகப்பெரிய உதவி. கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு உருவாகும் ரத்த சோகையால், குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப் படுகிறது. அதனால், இரும்புச் சத்துள்ள உணவுகளை உண்பது அவசியம். இச்சத்தின் குறைபாட்டால், இந்தியாவில், 70 சதவீத பெண்கள், அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொக்கி புழுக்கள் உருவாகி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்திலேயே, தினமும், நான்கு டம்ளர் பால் குடிக்க வேண்டும் அல்லது அதை ஈடு செய்ய, கால்சியம் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். கால்சியம் சத்து குறைபாட்டால், குழந்தைகள் பிறக்கும் போதே, எடை மற்றும் உயரம், மிகக் குறைவாக பிறக்கும். குழந்தைகள் பிறந்த ஐந்தாவது மாதத்தில், இரண்டு மடங்கு எடையும்; ஒரு வயதில், மூன்று மடங்கு எடையும், இருக்க வேண்டும். இரண்டு வயது வரை, கொடுக்கப்படும் ஊட்டச்சத்தே, அக்குழந்தையின் எதிர் கால நலத்திற்கான அடிப்படை. ஏனெனில், 18லிருந்து, 21 வயதிற்கு மேல், உயரத்தை கூட்ட இயலாது. எனவே, குழந்தையின் ஆரம்ப காலங்களில், அதிக அக்கறை செலுத்த வேண்டும்.